ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வின் அவசியம்.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டிசம் குழந்தைகளின் பிறப்பு 78 சதவீதம் அதிகரித்திருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறி உள்ளது.

ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்காக 2007-ல் ஐ.நா. ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், அதை தடுக்க ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியது. மேலும் ஏப்ரல் 2-ந்தேதியை ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2- ந்தேதி அன்று அனைத்து நாடுகளும் ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை அனுசரிக்கின்றன. இந்தியாவிலும் அனுசரிக்கப்படுகிறது. எனினும் ஐ.நாவின் இலட்சியமான ஆட்டிசத்தை தடுப்பதற்கான மருந்துகள் நவீன மருத்துவத்தால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஆட்டிசத்தை உலகிலேயே முதன் முறையாக ரத்னா சித்த மருத்துவமனை, மூலிகை மருந்துகள் மூலம் குணப்படுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வில் இன்னும் தீவிர அக்கறை செலுத்த வேண்டும். ஆட்டிசம் என்ற சொல்லுக்கு தமிழில் 'தன்முனைப்பு குறைப்பாடு' என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த ஆட்டிசம் என்பது மூளை நரம்பு செல் பாதிப்பால் ஏற்படுகிற ஒரு குறைப்பாடாகும். எனவே இதற்கு மூளை நரம்பு செல் பாதிப்பு நோய் என்று தமிழில் நான் பெயர் வைத்திருக்கிறேன். இந்த ஆட்டிசம் குறித்த வரலாற்றை இப்போது சுருக்கமாக பார்ப்போம்

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்து கொள்வது, யாரிடமும் ஒட்டாமல் தனி ஆளாக இருப்பது உள்ளிட்டவற்றை ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம். ஆனால் இந்த பாதிப்பை முதன் முதலாக ஒரு மருத்துவர் கண்டுபிடித்தபோது அந்த மருத்துவர் பல்வேறு சிரமங்களை அடைந்திருப்பார் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. ஒரு குழந்தை பிறந்தபிறகு காது கேட்காமல் இருப்பது, பேசாதிருத்தல், பார்வை குறைபாடு, உறுப்புகளின் வளர்ச்சி குறைபாடு போன்றவற்றை எளிமையாக கண்டுகொள்ள முடியும். ஆனால் ஆட்டிசத்தை அப்படி எளிமையாக வகைப்படுத்த முடியாது.

1943-ல் டாக்டர் லியோகார்னர் என்பவர் முதன் முதலில் ஆட்டிசம் என்கிற வார்த்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். பெற்றோர்களின் அரவணைப்பை குழந்தை பருவத்தில் பெறாதால்தான் இதன் பாதிப்பு ஏற்படுவதாக அவர் கருதினார். இந்த கருத்து தவறு என பின்னாளில் நிருபிக்கப்பட்டு விட்டது. எனினும் ஆட்டிசம் என்னும் குறைபாட்டை முதன் முதலாக வரையறை செய்தவர் என்கிற வகையில் டாக்டர் கார்னரின் பங்கு முக்கியமானது. இதே காலகட்டத்தில் டாக்டர் ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் என்பவரும் இதே வகை குறைபாடுகளை கொஞ்சம் வளர்ந்த, பேச முடிந்த குழந்தைகளிடம் கண்டறிந்தார்.1944-ல் ஜெர்மானிய மொழியில் இது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

கார்னரின் ஆராய்ச்சியில் முதன் முதலாக டொனால்டு என்பவர் பாதிக்கப்பட்டவராக அறியப்பட்டார். இவர் முறையான சிகிச்சையில் முழுமையாக குணமடைந்து இயல்பாக வாழ்ந்து வந்தார் என்ற தகவல் 2010 ல் வெளிவந்தது. இந்த தகவல் ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோருக்கு ஆழ்ந்த நம்பிக்கையை அளித்தது. இங்கு ஒரு உண்மையை நாம் தெளிவாக விளக்க வேண்டும். 20- ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் தான் தடுப்பூசிகள் வரத்தொடங்கின. குறிப்பாக மேலை நாடுகளில் 1920 - களில் தடுப்பூசிகள் போடும் பழக்கம் அதிகரித்தது. இதற்கு முந்தைய காலகட்டங்களில் ஆட்டிசம் பாதிப்பே கிடையாது. ஆட்டிசத்திற்கான சில அறிகுறிகள் வேண்டுமானால் தென்பட்டு இருக்கலாம். ஆனால் அந்த அறிகுறிகள் மனநல குறைபாட்டினாலும் எற்பட்டு இருக்கக்கூடும். உதாரணமாக நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றோர் ஆட்டிசம் பாதித்தவர்களாக இருக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். உண்மையில் அவர்களுக்கு சில மனநல பாதிப்பு வேண்டுமானால் இருந்திருக்கலாமே ஒழிய அது ஆட்டிசமாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.ஏனெனில் அந்த காலகட்டத்தில் தடுப்பூசிகள் கிடையாது.

ஆட்டிசம் குறைபாடு என்பது மூளை நரம்பு செல் குறைபாட்டால் ஏற்படுகிற ஒரு பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு நவீன மருத்துவம் இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. இதற்கான மூலிகை மருந்து சிகிச்சையை நான் கண்டுபிடித்து விட்டேன். இந்த மூலிகை சிகிச்சை மூலம், உலகம் முழுவதிலும் உள்ள ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளை முழுமையாக குணப்படுத்த முடியும். வருகிற ஆண்டுகளில் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இது குறித்த விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களும் பெறவேண்டியது அவசியமாகும். இதற்கான முன்னெடுப்பை மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும்.

Copyright 2015 Rathna Siddha Hospital and Herbal Research and Development centre