வயதான அப்பாக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் வர வாய்ப்பு உண்டா?

வயதான அப்பாவிற்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு எற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து நாட்டில் நடைப்பெற்ற ஆய்வில், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 30 சதவிகிதத்தினரின் தந்தையர் வயதானவர்கள் என்று தெரிய வந்துள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

எனவே நாற்பது வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் தம்பதியர், குழந்தையின் எதிர்காலத்தை கவனத்தில் கொள்வது என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆண்களுக்கு வயதான பின்னர் விந்தணுக்களின் ஆரோக்கியம் படிப்படியாக குறைய ஆரம்பிப்பதே இதற்கு காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்த ஆய்வாளர்களின் கருத்திலிருந்து நான் வித்தியாசப்படுகிறேன். ஆட்டிசம் பாதிப்பு என்பது பெரும்பாலும் குழந்தை பருவத்தில் போடப்படும் தடுப்பூசிகளால் ஏற்படுகிற பாதிப்பாகும். இந்த உண்மையை சில மேலை நாடுகளின் விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆய்வாளர்கள் சொல்லியுள்ளபடி, வயதான அப்பாக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது என்றால் அதற்கு காரணம், அவர்கள் குழந்தை பருவத்தில் போட்டுக்கொண்ட தடுப்பூசிகளாகத்தான் இருக்கும்.

இந்த ஆய்வின் கருத்துப்படி 30 சதவிகித குழந்தைகள் வயதான அப்பாக்களுக்கு பிறந்தது என்றால், 70 சதவிகித குழந்தைகள் இளம் வயது அப்பாக்களுக்கு பிறந்தவர்களே என்பதை ஆய்வாளர்கள் கவனிக்கத் தவறி விட்டார்கள். எனவே வயதான பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் வரும் என்ற கருத்து தவறு என்பது நிருபணமாகிறது.

தற்போதைய நிலையில் உலக அளவில் அமெரிக்காவில் தான் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் விகிதாச்சாரம் அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம், அங்கு தான் அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்த தடுப்பூசிகளுக்கு பின்னால் கார்பரேட் பலமும், அரசியல் பலமும் உள்ளது. இது குறித்து வேறு ஒரு கட்டுரையில் விரிவாக கூறியுள்ளேன். வாசகர்கள் அந்த கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளவும்.

மேலும் மரபணு மாற்று உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களும் அமெரிக்கர்கள்தான். மரபணு மாற்று உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிக்கும் என்பதற்கான உறுதியான ஆதாரம் கிடையாது. என்றாலும் ஒரு உண்மையை வேறு ஒரு கோணத்தில் நாம் ஆராய வேண்டியிருக்கிறது. மரபணு மாற்று உணவுகளால் மனிதனின் மரபணுக்குள்ளேயே மாற்றம் ஏற்படும் என்பது விஞ்ஞானிகளின் கூற்றாகும். இந்த கூற்றின்படி, மரபணு மாற்று உணவுகளை உண்ணும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாகும் பல்வேறு பிரச்சனைகளில் ஆட்டிசமும் ஒன்றா என்பது குறித்து விஞ்ஞான் உலகம் இன்னும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் இது குறித்த உண்மை விரிவாக தெரிய வரும்.

Copyright 2015 Rathna Siddha Hospital and Herbal Research and Development centre